டெல்லியில் நாளுக்குநாள் கரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக இப்பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் மாநிலத்தில் போதுமான மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதுமட்டுமின்றி மாநிலத்தில் கரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதனை ஈடுகட்டும் வகையில் தெற்கு டெல்லியில் உள்ள ஆர்எஸ்எஸ்பி என்ற அமைப்பின் வளாகத்தில் 10 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் கேர் சென்டர் அமையவுள்ளது. இதற்குச் சேவைபுரிய இந்திய-திபெத்திய எல்லைக் காவல் துறை (ஐ.டி.பி.பி.), ராணுவத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர் ஆகியோர் தேவை எனக் கோரி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.