அடுத்த மாதம் நடைபெறவுள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்ற பாஜக பேரணியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
அப்போது, " 2015ஆம் ஆண்டு நடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களை ஏமாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றிபெற்றார். அதையடுத்து என்ன நடந்தது? வாரணாசியில், பஞ்சாப்பில், ஹரியானாவில் என்ன நடந்தது? அவர்கள் தோற்றார்கள். இந்தத் தேர்தலிலும் அவர்கள் தோற்பார்கள்.
2020ஆம் ஆண்டு தேர்தலில் யாரை ஆட்சியில் அமர்த்தவேண்டும் என டெல்லி மக்கள் ஏற்கனவே முடிவுசெய்துவிட்டார்கள். கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 88 விழுக்காடு வாக்குச்சாவடிகளை நாங்கள் வென்றுள்ளோம்.
பாஜகவை நீங்கள் ஆதரித்தால், தேசிய எல்லைகளையும் பாதுகாப்பதற்கு ஆதரவாக எடுத்துக்கொள்ளப்படும் " என்றார்.
இதையும் படிங்க : வாக்குறுதிகளை நிறைவேற்றி மாபெரும் வெற்றி பெற்றுள்ளோம் - கே. டி. ராமாராவ் பெருமிதம்!