பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பதால் தேசிய தலைநகரான டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. கரோனா காலத்தில் காற்று மாசு ஏற்பட்டால் குழந்தைகள் முதியவர்கள் ஆகியோர் பெரும் இன்னலுக்குள்ளாவார்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், விவசாய கழிவுகளை எரிப்பதற்கு தடை விதித்து அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வேளாண் கழிவுகளை எரிக்கும் ஏழை விவசாயிகளை துன்புறுத்த வேண்டாம் என அண்டை மாநிலங்களுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.