கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக, 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 14ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்திவருகிறார்.
இதில், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது, ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.