இறுதிக் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே.19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் டெல்லி முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவாலை ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திர பாபு நாயுடு இன்று சந்தித்தார்.
கூட்டணிக்கு அச்சாரம் போடும் சந்திரபாபு நாயுடு - kejriwal
டெல்லி: தேர்தல் முடிவுகள் வெளியிட ஒரு வாரமே உள்ள நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு இன்று சந்தித்தார்.
சந்திரபாபு நாயுடு
மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் மே.23ஆம் தேதி அறிவிக்க உள்ள நிலையில், உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர்கள் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதியை நாளை சந்திர பாபு நாயுடு சந்திக்க உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி அமைக்க சந்திரபாபு நாயுடு முயன்று வருகிறார். இந்நிலையில் இந்த சந்திப்பு தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.