டெல்லியில் பாஜக மூத்தத் தலைவர் கபில் மிஸ்ரா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆம் ஆத்மி கட்சியின் பெயரை முஸ்லிம் லீக் என மாற்ற வேண்டும். ஏனெனில் இருவரும் ஒரே மாதிரிதான் அரசியல் செய்கின்றனர். அவர்கள் யோகியின் பேச்சுக்கு எதிரானவர்கள், தேச விரோதிகள், பயங்கரவாதிகள், துரோகிகள், கலகக்காரர்கள். இவர்கள் யோகிக்கு மட்டுமே பயப்படுவார்கள். யோகி உத்தரப் பிரதேசத்தில் கலவரக்காரர்களை அடக்கியுள்ளார்.
டெல்லியில் பேருந்துகள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. அதன் பின்னணியில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் உள்ளன. அரவிந்த் கெஜ்ரிவால் 'ஜின்னா அரசியல்' செய்கிறார்” என்றார்.
முன்னதாக, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத், “அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பாகிஸ்தான் அமைச்சர் ஆதரவளிப்பார். ஏனெனில் போராட்டக்காரர்களுக்குப் பிரியாணி ஊட்டுவதே அரவிந்த் கெஜ்ரிவால்தான்” எனப் பேசியிருந்தார். யோகியின் இந்தப் பேச்சுக்கு எதிராக ஆம் ஆத்மி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. 70 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட டெல்லி மாநிலத்துக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. முடிவுகள் வருகிற 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.
இதையும் படிங்க: 'குடும்ப பாரம்பரியத்தை மீறியது உண்மைதான்' - உத்தவ் தாக்கரே