காலநிலை மாற்றம் தொடர்பாக டென்மார்க்கில் நான்கு நாள்கள் நடைபெறுகின்ற 'சி-40' உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு கெஜ்ரிவால் காற்று மாசுவைக் குறைக்க அரசால் மேற்கொள்ளப்பட்ட வாகன கட்டுப்பாடு திட்டம் தொடர்பாக உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
'சி-40' மாநாடு செல்ல கெஜ்ரிவாலுக்குத் தடை... காரணம் இதுதானா? - Kejriwal advised not to attend C-40 meet
டெல்லி: காலநிலை மாற்றம் தொடர்பாக டென்மார்க்கில் நடைபெறவுள்ள 'சி-40' உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ”கெஜ்ரிவால் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவரது அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுவது உண்மையில்லை. டென்மார்க்கில் நடக்கும் பருவநிலை மாநாடு மேயர் அளவிலான தலைவர்கள் கலந்துகொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவேதான் கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் மாநாட்டில் பங்கேற்கிறார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'ஆம் ஆத்மியின் செல்வாக்கைக் கண்டு நடுங்கும் பாஜக!' - கோபால் ராய்