கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை சீனாவுடன் மோதல் வெடித்ததில் இந்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் வலுத்து வருகிறது.
ஆனால், அரசு திட்டங்களிலிருந்து சீன நிறுவனங்களை முற்றிலுமாகப் புறக்கணிப்பதே சீனாவிற்கு பாடம் புகட்டுவதற்கான சிறந்த வழி என முன்னாள் வர்த்தக மற்றும் தொழில்துறைச் செயலர் அஜய் துவா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஈடிவி பாரத் துணை தலைமை ஆசிரியர் கிஷ்ணானந்த் திரிபாதியிடம் பேசிய அஜய் துவா, "சீன நிறுவனங்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றால் ரயில்வே, தொலைத்தொடர்பு, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் அவற்றை அனுமதிக்கக் கூடாது.