தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேசிஆர்-பினராயி விஜயன் இன்று 'திடீர்' சந்திப்பு! கூட்டாட்சி கூட்டணியா? - kerala cm

திருவனந்தபுரம்: தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை இன்று சந்திக்கிறார்.

கேசிஆர், பினராய் விஜயன் இன்று சந்திப்பு!

By

Published : May 6, 2019, 8:08 AM IST

நாடு முழுவதும் 17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு ஏழு மாநிலங்களில் நடைபெறுகின்றன. இதில் ஏற்கனவே தெலங்கானா, கேரளா மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுவிட்டது. தேர்தல் முடிவுகள் மே 23 நண்பகலுக்குள் தெரிந்துவிடும்.

இந்நிலையில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர் ராவ், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை இன்று மாலை ஆறு மணிக்கு திருவனந்தபுரத்தில் சந்திக்கிறார். இதில் சமகால அரசியல் குறித்தும், தேர்தல் முடிவுக்குப் பின்னர் மூன்றாவது அணிக்கு வாய்ப்பு ஏற்பட்டால் கூட்டாட்சி கூட்டணி அமைக்கலாமா? என்பது போன்ற முக்கிய விஷயங்கள் குறித்தும் விவாதிக்க உள்ளனர்.

பின்னர், சந்திரசேகர் ராவ் அங்கிருந்து ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் கோயில்களுக்குச் செல்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details