லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினருக்கும் சீனா ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வருகிறது.
20 ராணுவ வீரர்கள் மரணம்: நிவாரணத்தில் அனைவரையும் விஞ்சிய தெலங்கானா முதலமைச்சர்! - KCR announces Rs 5 cr ex-gratia
கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் 20 பேருக்கு, நிவாரண உதவி வழங்கி அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
இதற்கிடயே வீரமரணம் அடைந்த 20 ராணுவ வீரர்களுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், லடாக்கில் சீன ராணுவ தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ அலுவலர் சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ரூ. 5 கோடி இழப்பீடு வழங்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். அதனோடு, சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ஒரு வீடு, அவரது மனைவிக்கு குரூப்-1 நிலையிலான அரசுப் பணி கொடுக்கவும் எனவும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
இதனோடு இந்தத் தாக்குதலில் உயிரிழந்த மற்ற மாநிலத்தைச் சேர்ந்த 19 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு, அதன்மூலம் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.