தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கு ரூ.10 ஆயிரம்: கேசிஆர் அறிவிப்பு - கன மழை

ஹைதராபாத்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நிவாரண உதவியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

kcr-announces-package-for-flood-relief-operations-550-cr-relief-fund-released
kcr-announces-package-for-flood-relief-operations-550-cr-relief-fund-released

By

Published : Oct 19, 2020, 9:09 PM IST

கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு ஹைதராபாத்தில் மழை பெய்துவருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வசித்துவரும் மக்கள் தங்களது உடமைகளை இழந்து தவித்துவருகின்றனர்.

இதனால் வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு உதவுவதற்காக மாநகராட்சி சார்பாக உடனடியாக ரூ.550 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாதிப்படைந்த வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தால் முழுவதுமாக பாதிப்படைந்த வீடுகளுக்கு ரூ.1 லட்சமும், குறைவான பாதிப்புகளை சந்தித்துள்ள வீடுகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகள், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை சரிசெய்து போர்க்கால அடிப்படையில் விரைவாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வெள்ள பாதிப்பு மீட்புப் பணிகளில் அனைத்து எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், மேயர்கள், அரசு அலுவலர்கள் என அனைத்து தரப்பினரும் ஈடுபட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கமல்நாத்தின் அவதூறு விமர்சனம்; மன்னிப்பு கேட்க காங்கிரஸ் மறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details