தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காசிரங்கா தேசியப் பூங்கா திறந்து ஒரு மாதத்திற்குள் 13 ஆயிரம் பேர் வருகை! - காசிரங்கா தேசிய பூங்கா திறந்து ஒரு மாதத்திற்குள் 13 ஆயிரம் பேர் வருகை

திஸ்புர் : அசாமின் புகழ்பெற்ற காசிரங்கா தேசியப் பூங்கா திறக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை பூங்காவிற்கு 13 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பூங்காபூங்கா
பூங்கா

By

Published : Nov 24, 2020, 5:16 PM IST

அசாம் மாநிலத்தில் காசிரங்கா தேசியப் பூங்கா அமைந்துள்ளது. புகழ்பெற்ற இந்தப் பூங்கா கரோனா தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. தொடர்ந்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் 21ஆம் தேதி மீண்டும் பூங்கா திறக்கப்பட்டது.

இந்நிலையில், பூங்கா திறக்கப்பட்ட தகவலை அறிந்த உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் முதல் நாள் முதலே பூங்காவிற்கு படையெடுக்கத் தொடங்கினர். மாஸ்க் அணிவது, தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பூங்கா நிர்வாகம் பின்தொடர்ந்தது.

இந்நிலையில், பூங்கா மீண்டும் திறக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை 13 ஆயிரத்து 568 பேர் பூங்காவிற்கு வருகை தந்துள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதில் 27 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அடங்குவர்.

இதுகுறித்துப் பேசிய பூங்கா இயக்குனர் பி.சிவகுமார், நவம்பர் 22ஆம் தேதி மட்டும் மொத்தம் 1,600 சுற்றுலாப் பயணிகள் பூங்காவிற்கு வருகை தந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details