தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உளவுத் துறையினர் என்று கூறிக்கொண்டு மிரட்டுகிறார்கள் - எம்.பி. கதிர் ஆனந்த் புகார் - Lok Sabha Member Kathir Anand

டெல்லி : உளவுத் துறையினர் எனக் கூறிக்கொண்டு தன்னை சிலர் மிரட்டியதாக திமுக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

kathir-anand-mp-complaint-that-intelligence-threatened-him
kathir-anand-mp-complaint-that-intelligence-threatened-him

By

Published : Sep 23, 2020, 12:09 AM IST

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் செப்.14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கூட்டத்தொடரின் ஒன்பதாம் நாளான நேற்று (செப்.22) திமுக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் பேசுகையில், ''உளவுத் துறையினர் எனக் கூறி அடையாளம் தெரியாத இருவர் என்னை இன்று சந்தித்தனர். அப்போது மக்களவையில் என்னப் பிரச்னை குறித்து நான் பேசப் போகிறேன் என்று கேள்வி எழுப்பினர்.

அவர்கள் இருவரும் நான் தங்கியிருக்கும் தமிழ்நாடு இல்லத்தில் அத்துமீறி நுழைந்தனர். ஒரு மக்களவை உறுப்பினருக்கே இந்த நிலை என்றால், மக்களின் நிலையைப் பற்றி சிந்திக்கவே முடியவில்லை'' என்றார்.

தொடர்ந்து அவருக்கு பதிலளித்து சபாநாயகர் ஓம் பிர்லா, 'சபை உறுப்பினர் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:காஷ்மீரில் அமைதி திரும்ப சட்டப்பிரிவு 370 தேவை - பரூக் அப்துல்லா

ABOUT THE AUTHOR

...view details