ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து(370, 35ஏ) ரத்து, பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட காரணங்களால் அப்பகுதியில் இணையசேவை, போக்குவரத்து பாதிப்பு, தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
அதன்பின், ஜம்மு இயல்பு நிலைக்கு திரும்புவதால் 2ஜி எனப்படும் இரண்டாம் அலைக்கற்றை இணைய சேவை வழங்கப்பட்டது. அதிலும் ஜம்மு, ரீசி, சம்பா, கத்துவா, உதாம்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு மட்டும் இணைய சேவை வழங்கப்பட்டது. இதையடுத்து அசாம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை, பதற்றமான சூழல் ஜம்முவில் இல்லை, மக்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
ஜம்முவில் மருத்துவ சேவை முற்றிலும் பாதிப்பு! இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஸ்ரீநகர் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், வெளிநாட்டில் இருந்து கிடைக்கப்பெறும் மருத்துவப் பொருட்கள் ஜம்முவிற்கு அனுப்ப முடியவில்லை என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
இதையடுத்து மருத்துவ சேவை, மருந்துப் பொருட்கள் உள்ளிட்வை கிடைக்காமல் ஜம்மு மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்ட பிறகும், மருந்துவப் பொருட்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அங்கு வசிக்கும் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், சமீபத்தில் மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் வழங்கியுள்ள நிலையில், விமான நிலையம் மூடப்பட்டுள்ள காரணத்தால் மருத்துவப் பொருட்கள் மட்டும் வழங்க முடியவில்லை என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.