ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தியின் இளைய மகள் இர்திக் ஜாவித் தனது பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் மெகபூபா முப்தி என்ற அவரது தாயாரின் பெயரை மெகபூபா சையத் என மாற்றவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்காக உள்ளூர் செய்தித்தாளில் ஒரு நோட்டீஸ் ஒன்றினையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த பெயர் மாற்றத்தில் ஏதேனும் மாற்றம் இருப்பின், ஏழு நாள்களுக்குள் துறைச் சார்ந்த அலுவலர்களிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மெகபூபா முப்தியும் அவரது கணவர் ஜாவித் இக்பால் ஷாவும் தற்போது இணைந்து வாழவில்லை. இவர்களுக்கு இல்திஜா, இர்திக் என்ற இருமகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் தனது தாயாரின் பெயரை பின்னொட்டாக (surname) இணைத்துக் கொண்ட நிலையில், இளைய மகள் தனது தந்தையுடனான பிணைப்பை அதிகரித்துக் கொண்டார்.