தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீரை பிரித்தது ஏன்? நாளை விளக்குகிறார் மோடி! - ஜம்மு காஷ்மீர்

டெல்லி: ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதையடுத்து, அது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாளை விளக்கம் அளிக்கவுள்ளார்.

kashmir

By

Published : Aug 5, 2019, 12:43 PM IST

Updated : Aug 6, 2019, 7:33 AM IST

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவுகளை ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் நேற்றுஉரையாற்றினார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் முடிவுக்குகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்ஒப்புதல் அளித்த நிலையில், இதற்கான அறிவிப்பாணையை அமித் ஷா நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

இதற்கு காங்கிரஸ், திமுக எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன. இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத், வரலாற்று நிகழ்வுகள், தியாகங்களை மறக்கடிக்க மத்திய அரசு முயல்வதாக சாடினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய வைகோ, ஜம்மு -காஷ்மீர் தனியாக பிரித்தெடுப்பதால் எமெர்ஜென்சி மீண்டும் வந்திருப்பதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு எமெர்ஜென்சி இல்லை 'அவசர தேவை' என விளக்கமளித்தார்.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு, இது ஜனநாயகப் படுகொலை என்றுஎதிர்க்கட்சியினர்தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், அது தொடர்பான காரணத்தை பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் நாளை நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிப்பார் என, மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

Last Updated : Aug 6, 2019, 7:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details