ஐநா பாதுகாப்பு சபை காஷ்மீர் பிரச்னையை சீனா மீண்டும் எழுப்பியது. அப்போது காஷ்மீர் பிரச்னை தொடர்பாக ஐநா பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் கவலையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தது.
சீனாவின் இந்த அறிக்கையை சபையின் உறுப்பினர்கள் நிராகரித்தனர். மேலும் இது இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்னை என்றும் கூறினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஐ இந்தியா நீக்கியதும், பாகிஸ்தான் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து சீனா மூலமாக இப்பிரச்னையை ஐநா சபைக்கு எடுத்துச் சென்றது.
காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால், ஐநா மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறது. எனினும் பாகிஸ்தான், சீனா உதவியுடன் இப்பிரச்னையைத் தொடர்ந்து எழுப்பிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 16 நாட்டு தூதர்கள் காஷ்மீர் பயணம்!