தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நுரையீரல் நிபுணருக்கு கரோனா : காஷ்மீர் மருத்துவத் துறையினர் கவலை - Kashmir frontline corona warrior tests positive

காஷ்மீரில் நுரையீரல் நிபுணர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது மருத்துவத்துறையை சார்ந்தவர்களை கவலைக்குள்ளாக்கி உள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Jun 2, 2020, 2:48 PM IST

காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரின் முக்கிய கரோனா பரிசோதனை மையங்களில் ஒன்றாக விளங்கும் நெஞ்சக நோய் மருத்துவமனை ஒன்றில் தலைமை மருத்துவராகப் பணியாற்றிவரும் நுரையீரல் நிபுணருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவ வட்டாரத்தில் உள்ளவர்களை இச்செய்தி கவலையில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக, தங்கள் மருத்துவமனைக்கு வரும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அம்மருத்துவர் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள மருத்துவர், மாநிலத்தில் நுழைவதற்கு முன்பே மக்களை தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அரசிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் கரோனா தொற்றால் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :ஜம்மு காஷ்மீரில் அத்துமீறிய பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை

ABOUT THE AUTHOR

...view details