காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளை சில நாள்களாக நடத்தி வரும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது, தற்போது ஆப்கானிஸ்தானிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஜெய்ஷ் அமைப்பு பயங்கரவாதிகள் இரண்டு நாள்களில் 13 பேர் சுட்டுக்கொலை!
கராச்சி: கடந்த இரண்டு நாள்களில் பாகிஸ்தான் ஜெய்ஷ் அமைப்பைச் சேர்ந்த 13 பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இதனால், அவ்வப்போது ஆப்கான் ராணுவ படைக்கும், பயங்கரவாதிகளுக்கிடையே மோதல் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களில் மட்டும் பாகிஸ்தான் ஜெய்ஷ் அமைப்பைச் சேர்ந்த 13 பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் (என்.டி.எஸ்), ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் (ஏ.என்.எஸ்.எஃப்) இணைந்து ஆப்கானிஸ்தானில் கோக்யானி மாவட்டத்தில் மிர்சா கேல் பகுதியில் மறைந்திருந்த 13 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.