தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீரில் மூன்றே மாதங்களில் ஆறு லட்சம் மெட்ரிக் டன் ஆப்பிள் ஏற்றுமதி! - காஷ்மீர் மக்கள் தொடர் துறை

ஸ்ரீநகர்: காஷ்மீரிலிருந்து ஆறு லட்சம் மெட்ரிக் டன் ஆப்பிள் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

pro

By

Published : Oct 25, 2019, 12:56 PM IST

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த சட்டப்பிரிவு 370ஐ கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது.

இதைத் தொடர்ந்து அம்மாநில முக்கிய அரசியல் தலைவர்கள் இன்னும் வீட்டுக் காவலில் இருந்துவரும் நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் ஆங்காங்கே இயங்கியும் வருகின்றன. இது முழுமையாக இல்லாவிட்டாலும் காஷ்மீரில் சிறிதுசிறிதாக இயல்பு நிலை திரும்புவதைக் காட்டுகிறது.

இதற்கிடையில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் ஆறு லட்சம் மெட்ரிக் டன் காஷ்மீர் ஆப்பிள்கள் டிரக்குகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டதாக அம்மாநில மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

ஆப்பிளுக்குப் பெயர்போன காஷ்மீரில் ஷோபியான், பரமுல்லா, அனந்நாக், காந்தர்பல் உள்ளிட்ட பகுதிகளில் ஆப்பிள்கள் அதிகமாக விளைகின்றன. ஆப்பிள்களைப் பறிக்கும் பணியில் காஷ்மீர் பள்ளதாக்குப் பகுதியில் வசிக்கும் பெருவாரியான மக்கள் ஈடுபடுவதால், அப்பணியே அவர்களின் வாழ்வாதாரமாக இருந்துவருகிறது.

மேலும் படிக்க: காஷ்மீர் விவகாரம்: வழக்கின் விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
மேலும் பார்க்க: தலையில் நெருப்புடன் ஆடிய சிறுமிகள்- இது நவராத்திரி கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details