இந்தியாவில் உள்ள கடற்கரைகள் பெரும்பாலும் அசுத்தமாகவே இருந்துவருகின்றன. கடற்கரைகளை சுத்தமாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் போதும், அவற்றின் மூலம் கடற்கரையை முற்றிலும் சுத்தமாக்க முடிவதில்லை.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் காசர்கோடு கடற்கரைக்கு டென்மார்க்கின் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் ‘ப்ளு ஃப்ளாக்’(blue flag) என்ற சுற்றுச்சூழல் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்ரும் கடற்கரைக்கு இந்த அந்தஸ்து வழங்கப்படும். காசர்கோடு கடற்கரையிலுள்ள நீரின் தரம், சுற்றுச்சூழல் மேலாண்மை, பாதுகாப்பு உள்ளிட்ட 33 அளவுகோலை டென்மார்க் சுற்றுச்சூழல் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் நேரில் ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்தே இந்த ப்ளூ ஃப்ளாக் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
காசர்கோடு கடற்கரையை தவிர இந்தியாவில் உள்ள மற்ற ஏழு கடற்கரைக்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
காசர்கோடு கடற்கரை துறைமுகத்துக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்