கர்நாடகா மாநிலம் பிஜப்புர் மாவட்டம் விஜயபுரா ரயில் நிலையம் அருகே, எத்தனால் (ethanol) டேங்கர் லாரியிலிருந்து எத்தனால் எடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து டேங்கர் லாரியில் வெல்டிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளாகியது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எத்தனால் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு! விபத்தில் விரேந்திர பிரஜப்பதி, ரஜினிநமி என்னும் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விஷ்வநாத், பதிகிரா, பசவராஜ் ஆகியோர் படுகாயங்களுடன் விஜயபுரா மாவட்ட மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படியுங்க: ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து! - 15 பேர் காயம்