கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய சேவைகளை தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.
அதேபோல பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், மத்திய அரசு கடந்த வாரம் வெளியிட்ட அன் லாக் வழிகாட்டுதல்களில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதியளித்தது. மேலும், இது குறித்து மாநில அரசுகள் அங்கிருக்கும் சூழலை கருத்தில் கொண்டு முடிவெடுக்கலாம் என்றும் அறிவித்திருந்தது.
இந்தச் சூழலில் கர்நாடகாவில் வரும் நவம்பர் 17ஆம் தேதி முதல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அம்மாநிலத்தின் உயர் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் அஸ்வத்த நாராயணா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " பொறியியல் மற்றும் டிப்ளமோ கல்லூரிகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி திறக்கப்படும்.