தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 29, 2019, 1:04 PM IST

ETV Bharat / bharat

கர்நாடக சபாநாயகர் ராஜினாமா!

பெங்களூரு: கர்நாடகா சட்டப்பேரவையில் பாஜக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றியடைந்ததையடுத்து, சபாநாயகர் ரமேஷ் குமார் பதவி விலகினார்.

Karnataka speaker Ramesh kumar resinged

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத), காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இதில் காங்கிரஸ், மஜதவைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் ஆளும் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து வெள்ளிக்கிழமை பாஜகவின் மாநிலத் தலைவர் எடியூரப்பா தலைமையில், புதிய அரசு அமைந்தது.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் பெரும்பான்மை நிரூபிக்க 104 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 105 பாஜக உறுப்பினர்கள், 1 சுயேட்சை உறுப்பினர் ஆதரவுடன் பாஜக வெற்றி பெற்றது.

இதனையடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கர்நாடக சட்டப்பேரவையை மாலை 5 மணி வரை துணை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details