ஆந்திர மாநிலம் ஆனந்தபுரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஆண்கள் அரசு பள்ளியைச் சேர்ந்த 44 மாணவர்கள், ஒன்பது ஆசிரியர்கள் என 57 பேரை ஏற்றிக்கொண்டு சுற்றுலாப் பேருந்து ஒன்று கர்நாடா சென்றது.
இந்த பேருந்து பிரபல சுற்றுலாத் தலமான ஜோக் அருவியிலிருந்து உடுப்பி மலைப்பாதை வழியாக முருதேஸ்வரை நேக்கி நேற்று இரவு சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது, எதிர்பாராத விதமாக பிரேக் செயலிழக்க கட்டுப்பாட்டை இழந்தப் பேருந்து அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாஷா பக்ருதீன் என்ற 10ஆம் வகுப்பு மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 14 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், உயிரிழந்த மாணவரின் உடலை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனையிலும், காயமடைந்தோரை வெவ்வேறு தனியார் மருத்துவமனையிலும் அனுமதித்தனர்.
இதையும் படிங்க : கேமராக்கள் இருந்தால்தான் பிரதமர் வேலைசெய்கிறார் - அனுராக் காஷ்யப் கிண்டல்