கர்நாடகவில் அரசியல் குழப்பம் நீடித்துவரும் நிலையில், தாங்கள் கொடுத்த ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகர் மறுப்பதாக உச்ச நீதிமன்றத்தில் அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 10 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
'10 எம்எல்ஏக்கள் ராஜினாமா... சபாநாயகர் இன்றே முடிவெடுக்க வேண்டும்' - கர்நாடகா
டெல்லி: ராஜினாமா கடிதம் கொடுத்த 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் குறித்து இன்றே முடிவெடுக்க வேண்டும் என கர்நாடக சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்
இது குறித்து விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம், ராஜினாமா கடிதம் அளித்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் 10 பேரும் இன்று மாலை 6 மணிக்குள் சபாநாயகர் முன் ஆஜராகி ராஜினாமா கடிதத்தை ஏற்க கோரிக்கை வைக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும் ராஜினாமா அளித்த 10 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அளிக்க காவல் தலைமை இயக்குநருக்கும் உத்தரவிட்டுள்ளது.
ராஜினாமா கடிதம் அளித்த 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் குறித்து சபாநாயகர் இன்றே முடிவெடுக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Last Updated : Jul 11, 2019, 2:47 PM IST