கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பத்து பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். இதை சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் ஏற்கவில்லை.
கர்நாடகா அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை! - கர்நாடகா
டெல்லி: கர்நாடக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 13 பேரின் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.
இதனையடுத்து அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பத்து பேரும் ராஜினாமாவை ஏற்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனு 16ஆம் தேதி விசாரிக்கப்படும், அதுவரை ராஜினாமா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சட்டப்பேரவை தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஐந்து அதிருப்தி எம்எல்ஏ-க்களும், ராஜினாமாவை ஏற்க வலியுறுத்தி மனு அளித்தனர்.
இந்நிலையில் இந்த இரண்டு மனுக்களையும் ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்கவுள்ளது.