தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘வேலை கொடு’ - பரப்புரையை தொடங்கும் கர்நாடக இளைஞர் காங்கிரஸ்!

கரோனா சூழலுக்கு முன்பே நம் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தது. 45 ஆண்டுகால வேலையில்லா திண்டாட்டம் இம்முறை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.

Youth Congress to hold protest march under 'Rozgar Do'
Youth Congress to hold protest march under 'Rozgar Do'

By

Published : Sep 4, 2020, 3:05 AM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம் முழுவதும் ‘வேலை கொடு’ என்ற தலைப்பில் இளைஞர் காங்கிரஸ் பரப்புரை மேற்கொள்ளவுள்ளது. இதன் ஒரு பகுதியாக தேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிவி ஸ்ரீநிவாசா, மவ்ரியா வட்டத்தில் இருந்து காங்கிரஸ் தலைமை அலுவலகம் வரை பேரணி நடத்தவுள்ளார்.

வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பதை கண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் ஆகஸ்ட் 29ஆம் தேதி இந்தப் பரப்புரை தொடங்கப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் பவன் ஹெரா, ஆளும் அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது கொடுத்த வாக்குறுதிகள் பற்றி நினைவுபடுத்த வேண்டிய கடமை காங்கிரஸுக்கு உள்ளது. தற்போது வேலையில்லா திண்டாட்டம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கரோனா சூழலுக்கு முன்பே நம் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தது. 45 ஆண்டுகால வேலையில்லா திண்டாட்டம் இம்முறை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details