கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட நிலையில், பத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும், மூன்று மஜத எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தனர். இதனால் ஆளும் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு சபாநாயகரிடம் நேரம் கேட்டார்.
கர்நாடகாவில் தொடரும் அரசியல் குழப்பம்: சட்டப்பேரவை இன்று கூடுகிறது - Congress
பெங்களூரு: பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடகா சட்டப்பேரவை இன்று கூடுகிறது.
கர்நாடகவில் தொடரும் அரசியல் குழப்பம்: சட்டப்பேரவை இன்று கூடுகிறது!
இந்நிலையில் இரண்டு நாள் விடுமுறைக்கு பின் சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இதில் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இருப்பதாக, அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏ-க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.