கர்நாடகா சட்டப்பேரவைக்கு 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதையடுத்து காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்தது. சிறு பூசல்களுடன் சென்றுகொண்டிருந்த கர்நாடக அரசியலில், 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பல மாற்றங்கள் நிகழத் தொடங்கின.
குமாரசாமி அரசுக்கு 18ஆம் தேதி அக்னிப்பரீட்சை
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் 18ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 15 காங்கிரஸ் எம்எல்ஏகள் ராஜினாமா செய்ததையடுத்து அம்மாநில சட்டப்பேரவையில் ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் கோரியது பாஜக. இதுகுறித்த அதிகாரப்பூர்வ கடிதத்தை பாஜக எம்எல்ஏ சுரேஷ் குமார் இன்று காலை சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் வழங்கினார். அதற்கு பதிலளித்த சபாநாயகர், இதுகுறித்து அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்
பின்னர் சபாநாயகர் ரமேஷ்குமார் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.