தமிழ்நாடு

tamil nadu

லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் இயற்ற கர்நாடகா அரசு முடிவு

By

Published : Dec 7, 2020, 3:48 PM IST

உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து கர்நாடகாவில் லவ் ஜிகாத், பசு வதை ஆகியவற்றுக்கு எதிராக சட்டம் இயற்ற அம்மாநில பாஜக அரசு தீர்மானம் கொண்டுவந்துள்ளது.

கர்நாடகா அரசு
கர்நாடகா அரசு

பெங்களூரு (கர்நாடகா): உத்தரப் பிரதேச மாநிலத்தை தொடர்ந்து, கர்நாடகாவிலும் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் இயற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் அம்மாநில பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தின்படி, திருமணத்திற்காக மதமாற்றம் செய்வதும் செல்லாது எனவும், கட்டாய மத மாற்றம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சட்டத்தின்படி, எஸ்.டி. எஸ்.சி அல்லது 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை கட்டாய மதமாற்றம் செய்தால், சம்பந்தபட்ட நபருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இந்நிலையில், லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டத்தை இயற்ற கர்நாடகா அரசு தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இதனுடன் பசுவதைக்கு எதிரான சட்டத்தை கொண்டுவரவும் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக, வல்லுநர் குழுவுடன் ஆலேசானை பெற்ற பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு முதல் கர்நாடகாவில் லவ் ஜிகாத்துக்கு எதிரான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் விசாரணையில், பெண்கள் விருப்ப மதமாற்றம் செய்தது தெரியவந்ததால், வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன. தற்போது கர்நாடகா மட்டுமல்லாது, மத்திய பிரதேசம், ஹரியானா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களும் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் இயற்றுவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றன.

இதையும் படிங்க:சுதந்திர இந்தியாவில் இப்படி நடக்குமா? உ.பி. காவல் துறை அராஜக போக்கால் கலங்கும் மணவீட்டார்

ABOUT THE AUTHOR

...view details