தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அத்துமீறி நுழைய முயற்சி - எல்லையில் தடுத்த போலீஸ்; ஓசுரில் பரபரப்பு! - karnatka tries to enter tamilnadu

கிருஷ்ணகிரி: கர்நாடகாவினர் 200க்கும் மேற்பட்டோர் 100 இருசக்கர வாகனங்களில் தமிழ்நாட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்றபோது காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

karnataka
karnataka

By

Published : Jan 5, 2020, 11:23 PM IST

தமிழ்நாட்டில் கடந்த மாதம் கர்நாடக மாநிலக் கொடியினை வாகனத்தில் கட்டிவந்தவர்களை தாக்கியதாகக் கூறி சுமார் 200க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் தமிழ்நாட்டிற்குள் நுழையப் போவதாகக் கிடைத்த தகவலின்பேரில் ஓசூர் எல்லையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

அதன்படி, கர்நாடகாவின் இளைஞர்கள், பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் கொடியினை கையில் எந்தியபடி 100 இருசக்கர வாகனத்தில் கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளியிலிருந்து தமிழ்நாடு எல்லையான ஓசூர் ஜூஜுவாடி வழியாக நுழையும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழ்நாட்டிற்குள் அத்துமீறி நுழையமுயற்சி

போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடாகவினர், சம்பந்தப்பட்ட காவல் துறை, அடையாளம் தெரியாத நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் போராட்டம் மிகப் பெரிய அளவில் தொடரும் என எச்சரித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:அரசு மருத்துவமனை பின்புறம் அழுகிய நிலையில் ஆண் சிசு; போலீஸ் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details