தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

CAAPROTEST மக்கள் அமைதிகாக்க வேண்டும் - கர்நாடக முதலமைச்சர் வேண்டுகோள்! - caa karnataka protest

பெங்களூரு: குடியுரிமை சட்டம் குறித்து தவறான கருத்து பரவி வருவதால் மக்கள் அனைவரும் அமைதிகாக்க வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

karnataka people Make  peace add Chief Minister Yediyurappa
மக்கள் அமைதிகாக்கவேண்டும்

By

Published : Dec 20, 2019, 3:18 AM IST

நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. வடகிழக்கு மாநிலங்கள் உட்பட பெரும்பான்மையான மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்த சட்டம் இந்தியாவின் மதசாற்பற்ற தன்மையையும், அரசியலமைப்பு சட்டத்தையும் கேள்விக்குள்ளாக்கும் எனக்கூறி எதிர்த்துவருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அம்மாநிலத்தில் கட்டாயமாக குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவதாகக் கூறியுள்ளார். இது மக்கள் போராட்டத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

மக்கள் அமைதிகாக்க வேண்டும் - கர்நாடக முதலமைச்சர்

இந்தப் போராட்டம் குறித்து பேசிய எடியூரப்பா, ‘மத்திய அரசு மக்களின் நலன்களைக் காக்க கொண்டுவந்த குடியுரிமை சட்டம் குறித்து சிலர் எதிர்மறை கருத்துகள் பரப்பி போராட்டத்தைத் தூண்டுகின்றனர். அவர்கள் மத்திய அரசின் மேல்கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இத்தகைய வதந்திகளைப் பரப்புகின்றனர். எனவே, மக்கள் தவறான கருத்துகள் பரப்புபவர்களிடம் இருந்து ஒதுங்கி அமைதி காக்கவேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம்: மங்களூரு போராட்டத்தில் இருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details