தமிழ்நாட்டில் போதிய அளவு மழை பெய்யாமல் பொய்த்ததால், தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் விவசாயத்திற்கு காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் காவிரி மேலாண்மை வாரியத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பு! - காவிரி
பெங்களூரு: காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஜூன், ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா திறந்துள்ளது.
இதனையடுத்து ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் காவிரி நீரை திறக்குமாறு அதிகாரிகளுக்கு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டார்.
இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு ஜூன், ஜூலை மாதம் வழங்க வேண்டிய நீரை கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 355 கன அடி நீரும், கபினி அணையிலிருந்து 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து திறந்து விடும் நீர் படிப்படியாக உயர்த்தப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.