பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிர்ஸி தாலுகா அரேகோப்பா பகுதியில் வசித்து வருபவர் சையத் இத்ரஸ் சபி சபா முன்னா. 25 வயதாகும் இவருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக மூன்று முறை தேசிய புலனாய்வு முகமையினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக இவர் தற்போது தேசிய புலனாய்வு முகமையினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.