பெங்களூரு:கர்நாடகாவில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருப்பவர் பிசி பாட்டீல். இவருக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து பெங்களூருவில் உள்ள வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திகொண்டார்.
இந்நிலையில் அவரின் மருத்துவ அறிக்கை வெளியானது. அதில் அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. மேலும் அவரின் வீட்டில் பணிபுரிந்த ஊழியர்கள் ஐந்து பேருக்கும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை பிசி பாட்டீல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “மருத்துவ அறிக்கையில் எனக்கு கரோனா பாதிப்பிருப்பது தெரியவந்துள்ளது. நான் என் வீட்டில் தனிமையில் உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.