கர்நாடகா மாநிலம், கொப்பல் மாவட்டத்தில் கனககிரி பகுதியைச் சேர்ந்தவர் கிரியப்பா. இவருக்கு மனைவியும், 26 வயதான ரமேஷ் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில், ரமேஷ் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வருவது குறித்து, தனது பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி ஒருகட்டத்தில் இருவரையும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.
பெற்றோருடன் வாக்குவாதம்: இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மகன்! - son killed parents with iron rod at karnataka
பெங்களூரு: கர்நாடகாவில் பெற்றோருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஆத்திரத்தில் மகன் இருவரையும் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
son
இதில், ரமேஷின் தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரமேஷின் தந்தை கிரியப்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.