கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் ரயில் நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் திடீரென ரயில்வே வழித்தடத்தில் இருந்த மின்சார கம்பத்தின் மீது ஏறியுள்ளார்.
இதைப் பார்த்த ரயில் நிலையத்திருந்த மக்கள் அவரை உடனடியாக இறங்குமாறு கூறியுள்ளனர்.

ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் உயர் மின்னழுத்த கம்பியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில் நிலைய ஊழியர்கள் அவரின் சடலத்தை கீழே இறக்கினர். மனநல பாதிக்கப்பட்ட அந்த நபர் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை என அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.