தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்னோவா காருக்குள் பிணமாகக் கிடந்த கேரள ரவுடி; நடந்தது என்ன? - காரினுள் கேரள ரவுடி பிணம்

மங்களூர் (கர்நாடகா): மங்களூருவில் கேரளாவைச் சேர்ந்த ரவுடி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Karnataka - Kerala rowdi sheeter dead body found in Innova car, rowdy sheeter shot dead, காரினுள் கேரள ரவுடி பிணம், ரவுடி தஸ்லிம் கொலை
Karnataka - Kerala rowdi sheeter dead body found in Innova car

By

Published : Feb 3, 2020, 7:29 PM IST

கேரள மாநிலம் காசர்கோடு அருகேயுள்ள செம்பரிக்கா பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி தஸ்லிம் (வயது40). இவர் மீது கொலை உள்பட 12 வழக்குகள் காசர்கோடு காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. மேலும் 2011ஆம் ஆண்டு கேரளாவில் ஆர்எஸ்எஸ் தலைவர்களைக் கொல்ல முயன்றதாகக் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து, பின்னர் பிணையில் வெளியே வந்தவர்.

இவ்வேளையில் கேரளாவில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூருவுக்குச் சென்ற தஸ்லிம், அங்குள்ள ஒரு நகைக்கடையில் கொள்ளையடித்ததாக ஐந்து கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், சமீபத்தில்தான் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை அறிவிப்பு!

இதனைத் தொடர்ந்து தஸ்லிம் தனது சகோதரருடன் காரில் மங்களூருவில் இருந்து கோழிக்கோடுக்குச் செல்லத் திட்டமிட்டார். அவரது கார் மங்களூரு அருகே உள்ள கலம்பூர் பகுதியில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது இன்னொரு காரில் வந்த ஒரு கும்பல் தஸ்லிம் சென்று கொண்டிருந்த காரை வழிமறித்து, அவரைக் கடத்திச்சென்றனர்.

இதுகுறித்து தஸ்லிமின் சகோதரர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இப்புகாரையடுத்து அவரது கைபேசி மூலம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மங்களூரு பி.சி. ரோடு பகுதியில் தஸ்லிம் பதுங்கியிருப்பது தெரியவந்தது. உடனடியாக காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றனர்.

கேபிள் இணைப்பைத் துண்டித்த தாய் - மகன் தூக்கிட்டு தற்கொலை!

அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இன்னோவா காரினுள் தஸ்லிம் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். இவரைக் கடத்திச் சென்ற கும்பல்தான், சுட்டுக்கொன்று விட்டு தப்பிச் சென்றது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details