கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் உள்ள பைரம்பள்ளி கிராமத்தில் வசிப்பவர் சஞ்சீவ். இவருக்கு ரோஹித் (4) என்ற மகனும், பர்வீன் (3) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து, பின் தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.
இரு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தந்தை! - Kalburgi Father Killed Own Children
பெங்களூரு: கல்புர்கியில் தந்தை தனது இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகவில் தந்தைதனது இரு பிள்ளைகளையும் விஷம் வைத்து
ஆனால், சஞ்சீவ் உயிர் பிழைத்துள்ளார். தகவலறிந்த காவல் துறையினர் சஞ்சீவிடம் நடத்திய விசாரணையில், குடும்பப் பிரச்னை காரணமாக தன் குழந்தைகளைக் கொன்று, தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததாகக் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரித்துவருவதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் பைரம்பள்ளி கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஏமாற்றிய லிவ்-இன் இணை - காவல் நிலையம் முன் பெண் தீ வைத்து தற்கொலை
Last Updated : Jan 3, 2020, 3:42 PM IST