தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா நிதியாக ரூ.1 கோடி அளித்த இன்டெல்: உற்பத்திப் பிரிவுகளை அமைக்க அழைப்பு! - கர்நாடகா கரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடி வழங்கிய இன்டெல்

பெங்களூரு: கர்நாடகாவுக்கு கரோனா நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாயை வழங்கிய இன்டெல் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகளை மங்களூருவில் அமைக்க அம்மாநில துணை முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

intel
intel

By

Published : Jun 3, 2020, 8:28 PM IST

கரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் கர்நாடக மாநிலத்திற்கு, பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்டெல் நிறுவனம் 1 கோடி ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியுள்ளது‌. இதற்கான காசோலையை இன்டெல் நிறுவனத்தின் இயக்குநர், அம்மாநில துணை முதலமைச்சரிடம் வழங்கினார்.

இந்நிலையில், துணை முதலமைச்சர் சி.என். அஸ்வத் நாராயணன், இன்டெல் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகளை மங்களூரு அல்லது பெலகாவியில் அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.

அதில், மங்களூருவில் ஒரு துறைமுகம் உள்ளது என்றும், கோவாவிலிருந்து பெலகாவி துறைமுகம் செல்ல சில மணி நேரங்களே ஆவதால் கர்நாடகாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களை கடல் வழியாக எளிதாக ஏற்றுமதி செய்யலாம் எனவும் கூறியிருந்தார்.

மேலும், இன்டெல் இந்தியத் தலைவர் நிவ்ருதி ராய் மற்றும் பிற உயர் அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் வீடியோ கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது கரோனாவைக் கையாளும் கர்நாடக அரசை ராய் பாராட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details