தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மொழிப் பிரச்னையால் இஐஏ அறிக்கைக்கு இடைக்கால தடை! - மத்திய அரசு இஐஏ வரைவு

பெங்களுரு: இஐஏ-2020 வரைவு அறிக்கையை இந்தி அல்லாத பிராந்திய மொழிகளில் வெளியிடாதது ஏன் என மத்திய அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அனைத்து மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிடும் வரை அதற்கு ஒப்புதல் அளிக்க இடைக்கால தடையும் விதித்துள்ளது.

HC
HC

By

Published : Aug 5, 2020, 6:25 PM IST

இ.ஐ.ஏ எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020ஐ மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. இதற்கு சூழலியல் ஆர்வளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றன.

இந்த வரைவு தொடர்பாக கர்நாடக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அதன் விசாரணை நடைபெற்றது. அதில், வரைவு அறிக்கை வெளியிடபட்ட மொழி தொடர்பாக உயர் நீதிமன்றம் முக்கியக் கேள்வியை எழுப்பியது. வரைவு அறிக்கை ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மற்ற மாநிலங்களின் பிராந்திய மொழிகளில் இதை வெளியிடாதது ஏன், என மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 43 விழுக்காடு மக்கள் மட்டும் இந்தி மொழி தெரிந்தவர்கள் எனவும், மீதமுள்ள 57 விழுகாட்டினர் இந்தி அல்லாத மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் புள்ளிவிவரம் தெரிவிப்பதாக மேற்கோள்காட்டிய உயர் நீதிமன்றம், கன்னடம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மத்திய அரசு வரைவு அறிக்கையை வெளியிட வேண்டும் எனக் கூறியுள்ளது.

அதுவரை இஐஏ வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது என இடைக்கால தடை விதித்து, வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதையும் படிங்க:சிவில் சர்வீஸ் தேர்வில் காரைக்காலை சேர்ந்த மாணவி புதுச்சேரி மாநிலத்தில் முதலிடம்

ABOUT THE AUTHOR

...view details