கர்நாடகாவில் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை ஐந்து லட்சத்து 92ஆயிரத்து 911 பேர் பாதித்தும், எட்டு ஆயிரத்து 777 பேர் உயிரிழந்தும் உள்ளனர். அதுமட்டுமின்றி கர்நாடகா தலைநகரான பெங்களூருவில் நாளுக்கு நாள் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநில மருத்துவ கல்வித் துறை அமைச்சர் சுதாகர், அத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சுதாகர், “கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வண்ணம் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் தகுந்த இடைவெளியுடன் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். மீறி அதிகமானோர் பங்கேற்றால் விழா ஏற்பாட்டாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி 50 விழுக்காடு மக்களுடன்தான் பேருந்தை இயக்க வேண்டும்.