தமிழ்நாடு

tamil nadu

வெளிநாட்டு நிறுவனங்களை டார்கெட் செய்யும் கர்நாடகா அரசு!

By

Published : May 11, 2020, 9:11 PM IST

பெங்களூரு: வெளிநாட்டு நிறுவனங்களை தங்களது மாநிலத்திற்கு ஈர்ப்பதற்கான முயற்சியை திட்டமிடப்பட்டிருப்பதாக, கர்நாடகா தொழில்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.

்ே்ே
ே்ே

கர்நாடகா மாநிலம், தொழில்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டை ஈர்ப்பதற்காக தலைமைச் செயலாளர் டி.எம் விஜய் பாஸ்கரின் தலைமையிலான குழுவை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்தக் குழு மாநிலத்தின் முக்கியத் தொழிலதிபர்கள், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் ஆகியோரிடம் கருத்துகளையும், பரிந்துரைகளையும் கேட்பார்கள். இதற்கு முன்னதாக, இன்போசிஸ் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், நிர்வாகமற்ற தலைவருமான நந்தன் நிலகேனி, பயோகான் லிமிடெட் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார் போன்ற தொழிலதிபர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தொழில்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "சில தனியார் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தித் தளங்களை சீனாவிலிருந்து வெளியேற்ற முயன்று வருகின்றனர். அத்தகைய 100 நிறுவனங்களின் பட்டியல் உருவாக்கி, கர்நாடகா மாநிலத்திற்குக் கொண்டு வர தொழில்துறை தலைவர்கள் முயன்றுவருகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க:திருப்பதியைப் போல மாறும் அயோத்தியா

ABOUT THE AUTHOR

...view details