கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக இன்று நடந்த விவாதத்தின்போது, காங்கிரஸ்- மஜத எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையை நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைத்து சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டார்.
நம்பிக்கை வாக்கெடுப்பை நாளை வைத்துக்கொள்ளுங்கள்: கர்நாடக ஆளுர் - Karnataka Governor Vajubhai Vala
பெங்களூரு: ஆளும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை நாளை மதியம் 1.30 மணிக்கு நடத்த வேண்டும் என கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டுள்ளார்.
test
ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்தவேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் சட்டப்பேரவையிலே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை நாளை மதியம் 1.30 மணிக்கு நடத்த வேண்டும் என அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா, முதலமைச்சர் குமாரசாமிக்கு எழுதிய கடிதத்தில் உத்தரவிட்டுள்ளார்.