நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவைகள் நேற்று தொடங்கிய நிலையில், விமானம் மூலம் மத்திய அமைச்சர் டி.வி. சதானந்த கவுடா நேற்று பெங்களூரு வந்த நிலையில், அவருக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இது அம்மாநில மக்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகா வந்து செல்லும் மத்திய அமைச்சர்கள், மாநில அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு கட்டாய தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, “தங்கள் பயண தேதிக்கு முந்தைய இரண்டு நாட்களுக்குள், ஐசிஎம்ஆரால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டு, கரோனா தொற்று இல்லை என உறுதிபடுத்தப்பட்டு, மருத்துவ சான்றிதழ் வைத்திருக்கும் எவருக்கும், கட்டாய தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.