கர்நாடகா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோற்றதைத் தொடர்ந்து, எடியூரப்பா முதலமைச்சராக ஜூலை 26ஆம் தேதி பதவி ஏற்றார். இதனைத் தொடர்ந்து, ஜூலை 29ஆம் தேதி பாஜக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தது. 20 நாட்களுக்கு மேலாக அமைச்சரவை பொறுப்பேற்காத நிலையில், இன்று 17 உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவையை எடியூரப்பா அமைத்தார்.
மாநில அமைச்சரான முன்னாள் முதலமைச்சர்! - மாநில அமைச்சர்
பெங்களூரு: கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷட்டர், எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதில், முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷட்டர், முன்னாள் துணை முதலமைச்சர்கள் ஈஸ்வரப்பா, அசோகா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பலரை பாஜக மேலிடமே தேர்வு செய்துள்ளதாகவும், எடியூரப்பாவின் பல தேர்வுகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முக்கியமாக, முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஸ் ஷட்டருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருப்பது எடியூரப்பாவின் ஆதிக்கத்தை குறைக்கத்தான் என அரசியல் விமர்சகர்கள் கருத்துதெரிவித்துள்ளனர். மேலும், சமூக அடிப்படையிலும், பிராந்திய அடிப்படையிலும் அமைச்சரவையில் இடம்கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.