கர்நாடகா மாநிலம் சிக்மங்களூரு மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த மருத்துவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவருடைய சோதனை முடிவுகள் தவறானது என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தற்போது அவர் தனிமைப்படுத்தும் மையத்தில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
மருத்துவரின் தற்போதய பரிசோதனை அறிக்கையின்படி, வெவ்வேறு ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பல கட்ட சோதனைகளில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பதும், அவரது நெருங்கிய தொடர்புகள், உறவினர்கள் என எவரும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.