தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகவில் கோடிக்கணக்கில் போதைப்பொருள் பறிமுதல்! - கர்நாடகவில் கோடிக்கணக்கில் போதைப்பொருள் பறிமுதல்

பெங்களூரு: கர்நாடகாவில் 1.2 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை மசாஜ் செய்யப்பயன்படும் கருவிக்குள்ளே ஒளித்து வைத்து கடத்த முயன்ற போது சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

பணம்
பணம்

By

Published : Nov 13, 2020, 2:00 AM IST

வெளிநாட்டிலிருந்து கர்நாடகாவில் உள்ள வெளிநாட்டு தபால் நிலையத்திற்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அதில், கால்களை மசாஜ் செய்யும் கருவி என குறிப்பிடப்பட்டிருந்தது. அதுகுறித்து சுங்கத் துறை அலுவலர்களுக்கு சந்தேகம் எழுந்த நிலையில், அந்த பார்சலை திறந்து பார்த்தனர். மசாஜ் செய்யும் கருவிக்குள்ளே போதைப்பொருள் இருப்பது சோதனையின்போது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, போதைப்பொருளை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பெங்களூரு நகர சுங்கத் துறை இணை ஆணையர் பாரி வள்ளல் கூறுகையில், "மசாஜ் செய்யும் கருவிக்குள்ளே போதை மாத்திரைகள் இருந்தது சோதனையில் தெரிய வந்தது. போதை தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் அந்தப் போதை மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள 2.3 கிலோ எடையுள்ள போதை மாத்திரைகளின் மதிப்பு சர்வதேசச் சந்தையில் 1.2 கோடி ரூபாயாக இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. சட்டவிரோதமான மாத்திரைகளை ஏற்றுமதியோ இறக்குமதியோ விற்றாலோ வைத்திருந்தாலோ அது தண்டனைக்குரிய தாகும். 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்" என்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், கர்நாடக நடிகர்களுக்கு போதைப்பொருள் விற்ற மூவரை போதை தடுப்பு பிரிவு அலுவலர்கள் கேரளாவில் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து பெங்களூர் முழுவதும் போதைப்பொருளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details