கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட நிலையில், பத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும், மூன்று மஜத எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பத்து பேரும் மும்பையில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கியுள்ளனர்.
கர்நாடகாவில் அடுத்தடுத்து நிகழும் அரசியல் குழப்பம்: இன்று முதலமைச்சர் ராஜினாமா?
பெங்களூரு: கர்நாடகவில் ஆளும் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்ட நிலையில், இன்று முதலமைச்சர் குமாரசாமி பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, இந்த எம்எல்ஏக்களை சமாதானம் செய்வதற்காக மும்பை சென்ற கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான சிவக்குமார், மும்பை ஒட்டல் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இருந்தும் எம்எல்ஏக்கள் சிவக்குமாரை சந்திக்க மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில், கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டதாலும், 2 சுயேட்சைகள் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டதாலும், பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாத குமாரசாமி தலைமையிலான அரசு, ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.